தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மணல் டெண்டரை தமிழகம் முழுவதும் யார் எடுக்க போகிறார்கள் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மணல் ராஜ்யத்தை நடத்தி வந்த புதுக்கோட்டை எஸ். ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஆகிய மூவரும் அந்த இடத்திலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக மயிலாடுதுறையைச் சார்ந்த ராஜப்பாவிடம் அந்த பொறுப்பை தமிழக அரசு ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வருகிற 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முதலில் சில மாவட்டங்களில் மணல் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்குப் பிறகு தமிழகம் முழுவதும் ராஜப்பாவின் ஆட்கள் மேற்பார்வையில் தான் மணல் தொழில் நடக்கப்போவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
அப்போ இனி ராஜப்பா கையில் தான் தமிழகம்…
செய்தி – தமிழ்.