HomeUncategorizedகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழிலாளர்கள் தின கொடியேற்றம்...

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழிலாளர்கள் தின கொடியேற்றம்…

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு அலுவலகத்தில் கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் ஜி.பெரியசாமி தலைமையில்
மே தின கொடியேற்று விழா மே 1 அன்று காலை 11 மணியளவில் நடைப்பெற்றது. நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மேதின கொடியேற்றி சிறப்புரையாற்றினர்.

மாவட்ட செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், ஆஞ்சலா மேரி, இடைக்கமிட்டி செயலாளர்கள் சாமு, சி‌.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் T.ராஜா, இளவரசன், சக்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் மு.நந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here