ஓசூர் ஆகஸ்ட் 9
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் பகுதியில் வரலட்சுமி நோன்பு தெலுங்கு, கன்னடம் ,தமிழ் பேசும் மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரலட்சுமி நோன்பு பண்டிகையை ஒட்டி பூக்கள், பழங்கள்,தேங்காய், பூஜை பொருட்களின் விலை கிடு கிடு உயர்வை எட்டியது. விலை உயர்வையும் பொருள்படுத்தாத பொதுமக்கள் அனைத்து பொருட்களையும் வாங்க பெரும் அளவில் நகரத்தில் குவிந்தனர்.

ஓசூர் எம்ஜி ரோடு பகுதியில் பவுல்ட்ரி சோலைராஜ் குடும்பத்தினர் அந்தப் பகுதி பொதுமக்களை அழைத்து வெகு சிறப்பாக வரலட்சுமி நோன்பு விழாவை கொண்டாடினர்.
செய்தியாளர்
ஜிபி.மார்க்ஸ்