கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்எம் நகர் இ.சி.ஐ இமானுவேல் சபையின் சார்பாக குந்தாரப்பள்ளி கூட்ரோடு நரிக்குறவர் காலனி, இருளர் காலணியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சுகாதாரம்,கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வாழ்த்து,பரிசளிப்பு நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இ.சி.ஐ இம்மானுவேல் சேவை போதகர் ரெவரன் சி.பிரபுதாஸ் கலந்து கொண்டு நரிக்குறவர் காலனி, இருளர் காலனி பொதுமக்கள்,
குழந்தைகளுக்கு பரிசுகளையும், பாராட்டையும், வாழ்த்துக்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈ.சி.ஐ சபையைச் சார்ந்த சபை ஊழியர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடத்திட உதவி புரிந்தனர்.