தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், வயது 67 என்பவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அருள்செல்வனுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் படி அருள்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று சோதனை செய்தபோது திருவோணம் அருகே வெட்டிக்காடு கிராமத்தில் ஒரு கட்டிடத்தில் மருத்துவமனை இயங்கி வந்ததும் ஏராளமான மருந்துகள் மற்றும் ஊசி மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக மகாலிங்கத்தை , ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் மகாலிங்கம் பிகாம் படித்துவிட்டு ஊறிய மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது இந்நிலையில் ஒரத்தநாடு போலீசார் மகாலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் திருவோணம் பகுதியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது,
செய்தியாளர். பழனிவேல்…

