9/07/2025 புதன் கிழமை
திருவாரூர் வருகிறார் தமிழக முதல்வர். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புது பேருந்து நிலைய த்திற்கு செல்லும் வழியில் மேம்பாலம் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையினை திறந்து வைக்க தமிழக முதல்வர் திருவாரூர் வந்துள்ளார்.
மாலை ஐந்து மணிக்கு விழாவினை தொடங்கும் முதல்வர் தங்கி இருக்கும் இடத்திலிருந்து நடைப்பயணமாக சிலை நிறுவப்பட்டிருக்கும் இடத்திற்கு வரும் முதல்வர் சிலையை திறந்து வைக்கிறார். பின் மேலும் ஒரு நாள் திருவாரூரிலேயே தங்கி இருந்து திருவாரூரில் கட்டிக் கொண்டிருக்க கூடிய புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக திருவாரூர் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு சாலை நிரூபமும் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர் பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுப்பு விடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பணிகள் பொதுமக்கள் தங்கள் பணிகள் நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
அ. காவியன்
செய்தியாளர்