தமிழக மட்டுமில்லை ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன் வீட்டில் கொள்ளை போன சம்பவம் . EX.எம்பி வீட்டில் கொள்ளை அடிக்கும் அளவிற்கு துணிச்சல் எப்படி வந்தது.? யார் இந்த கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தார்கள் எப்படி இவர்களால் தஞ்சையை குறி வைத்து கொள்ளை அடிக்க முடிந்தது என்று காவல்துறை விசாரணை முடித்த நிலையில் நாம் இது பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம்.

தர்மபுரி இளங்கோ நகர் பகுதியைச் சார்ந்தவர்கள் பாத்திமா ரசூல், ஆயிஷா பர்வீன், சாதிக் பாஷா, மொய்தீன் ,உள்ளிட்ட அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் இவருடைய தொழிலே பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது தான் தமிழகத்தில் பல இடங்களில் கொள்ளை அடித்து விட்டு தஞ்சை பகுதியை கடந்த வாரம் குறி வைத்து இருக்கிறார்கள், அதற்காக தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள விடுதிகளில் ரூம் எடுத்து மாறி மாறி தங்கி உள்ளனர். அந்த நேரத்தில் தான் புதிய பேருந்து நிலையம் சேகர் நகரில் உள்ள AKS விஜயன் வீடு மற்றும் அதற்கு அருகில் உள்ள இன்னொருவரின் வீடும் பூட்டி இருக்கிறது
அதனை குறி வைத்த இந்த கும்பல் இரண்டு நாட்களாக நோட்டமிட்டுள்ளது.
அந்த இரு வீடுகளையும் குறி வைத்த நேரத்தில் AKS விஜயன் வீடு இல்லாமல் மற்றொருவர் வீடு சற்று நேரத்தில் திறக்கப்படுகிறது. AKS வீடு மட்டும் பூட்டியே இருக்கிறது அதனை வெள்ளிக்கிழமை இரவு கொள்ளை அடிப்பதற்கு பிளான் செய்த அந்த கும்பல் அவர் முன்னாள் எம்.பி என்று தெரியாமல் ஏதோ பூட்டு போட்டு இருக்கிற வீடு என்று மட்டும் தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் குடும்பத்துடன் உள்ளே சென்று லாக்கர்களை உடைத்துள்ளனர். அதில் தேவைக்கு அதிகமான தங்க நகைகள் இருப்பதை பார்த்த அந்த கொள்ளை கும்பல் உடனடியாக அதனை எடுத்துக் கொண்டு சற்று நேரத்தில் வெளியாகி உள்ளனர். மேலும் அந்த இடத்தில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதையுமே அந்த கொள்ளை கும்பல் தொடவில்லை காரணம் தங்கத்தின் அளவு அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த கும்பல் அன்று இரவே சொந்த ஊரான தருமபுரிக்கு சென்று விடுகின்றனர். அடுத்த நாள் காலை செய்தி பெரிதாவதை உணர்ந்த அந்த கொள்ளையர்கள் எப்படியும் தங்களை காவல்துறை பிடித்து விடும் என்று உணர்ந்து அந்த கும்பல் கொள்ளையடித்து வந்து நகைகளை ஒரு கூட்டுறவு வங்கி மூலம் லாக்கரில் தன் சகோதரி மூலம் அப்படியே வைத்து விடுகின்றனர். அதிலிருந்து 5 பவுன் மட்டும் எடுத்து செலவு செய்து விட்டு மீதி உள்ள நகையை அப்படியே லாக்டரில் வைத்து விட்டு சென்னை சென்று விடுகின்றனர். சென்னை சென்று விட்டு திரும்பி வரும்போது முன்னாள் கும்பகோணம் டி.எஸ்.பி. கீர்த்திவாசன் மூலமாக ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வாகன சோதனை நடத்தும் போது தஞ்சை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அடையாளத்தை வைத்து இந்த கும்பலை ஸ்ரீபெரும்புதூரில் கைது செய்கிறார்கள். கைது செய்தவுடன் அங்கிருந்து தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு தகவல் சொல்ல அவர்களும் சேகரித்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு
உடனடியாக தர்மபுரி சென்று சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். கைது செய்து அவர்களிடம் இருந்து
கொள்ளை அடித்த நகைகளையும் மீட்டு தஞ்சைக்கு கொண்டு வந்தனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அவர்களுடைய தந்தை மற்றும் சகோதரி அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். இந்த கும்பல் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டுக்கோட்டையில் மட்டும் இவர்கள் மீது பத்திற்கு மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல தமிழகத்தில் சென்னை,சேலம், தர்மபுரி, ஈரோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் இவர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குடும்பமே சேர்ந்து கொள்ளையடிப்பது தான் இவர்களுடைய தொழில். அதிலும் இவர்கள் காவல்துறைக்கு சவாலான கொள்ளையர்களாம் தங்கள் எந்த இடத்தில் கொள்ளையடித்தாலும் தடயங்கள் எதுவுமே இல்லாமல் பார்த்துக் கொள்வார்களாம், இவர்கள் கைரேகை கூட எந்த இடத்திலும் படியாத மாதிரி நடந்து கொள்வார்களாம். கொள்ளை போய் சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கண்டுபிடிக்க காரணமாக இருந்த தஞ்சை எஸ்.பி மற்றும் வல்லம் டிஎஸ்பி காயத்ரி, தஞ்சை டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம், தஞ்சை எஸ்.பி. தனிப்பிரிவு ஆய்வாளர் ராமதாஸ், மற்றும் காவல் ஆய்வாளர்கள் முத்துக்குமார், சந்திரா ,சோமசுந்தரம், அகிலன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் தென்னரசு, அருள், மற்றும் காவலர்கள் சாமிநாதன், கோதண்டபாணி,திருக்குமரன், அருண்மொழிவர்மன், இஸ்மாயில், பிலி ராஜ், பிரகாசன்,சிம்ரான்,விஜய சந்திரன், பிரகதீஸ்வரன், ஜோஸ்வா,
உள்ளிட்ட காவல் அதிகாரிகள் திறம்பட இரவு பகலாக உறக்கமில்லாமல் பணியாற்றி இந்த சவால் மிக்க வழக்கை கையாண்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை சில மணி நேரங்களில் கண்டறிந்து தஞ்சை காவல்துறையின் கெளரவத்தை நிலை நாட்டிய மாவட்ட காவல்துறையினரை உண்மையிலேயே பாராட்ட வேண்டியது தஞ்சை மக்களின் கடமை
செய்தி –எம்.விஜய்
