Tuesday, August 5, 2025
No menu items!
HomeUncategorizedDYFI சூளகிரி வட்ட மாநாடு

DYFI சூளகிரி வட்ட மாநாடு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரண்டாவது சூளகிரி வட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தோழர் சி.முருகன் தலைமை தாங்கினார், முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர்.சி சுரேஷ், வாழ்த்துரை வழங்கினார். தோழர்.முரளி முன்னிலை வகித்தார், வாலிபர் சங்கத்துடைய மாவட்டத் தலைவர் தோழர் சக்தி நிறைவுறை ஆற்றினார். புதிதாக 11 பேர் கொண்ட வட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், வட்ட தலைவராக தோழர் பிரதீப், வட்ட செயலாளராக தோழர்.முரளி, வட்ட பொருளாளராக தோழர்.பாலாஜி, துணைச் செயலாளராக தோழர் சஞ்சய், துணைத் தலைவராக தோழர்.சந்தோஷ், நிர்வாகிகளாக பிரவீன், அன்பு, அஜித்,சக்திவேல் அருண், சீனிவாசன், ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1
சூளகிரி சுற்றியுள்ள மலைகளை பாதுகாக்க வேண்டி தீர்மானம்.

தீர்மானம் 2
சூளகிரி பகுதி சுற்றி சுற்றி இயங்கி வரக்கூடிய தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலை வழங்கிட வேண்டிய மாதம் 25000 ரூபாய் ஊதியத்தை உத்திரவாதம் செய்து வேலையை நிரந்தரமாக வழங்கிட வேண்டி

தீர்மானம் 3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி வட்டத்தில் மல்லச்சந்திரம் கிராமத்தில் உள்ள பழங்கால கற்கோவில் குகைகள் பாதுகாக்க வலியுறுத்தி சுற்றுலா தளமாகவும் மேம்படுத்திட வலியுறுத்தியும் தீர்மானம்,
தீர்மானம் 4
சூளகிரி வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும் என்று

தீர்மானம் 5
சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தினை உயர்த்தி துணை மருத்துவமனையாக அறிவித்திட வேண்டி
தீர்மானம் 6
சூளகிரி பகுதியில் பெண்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரிகளை அமைத்திட வேண்டி தீர்மானம்,
தீர்மானம் 7
அரசு பேருந்து இயங்கக்கூடிய இடங்களில் சூளகிரி டு பேரிக்கை நோக்கி மாலை நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஏதுவாக மாலை நேரத்தில் டவுன் பஸ்சை இயக்க வேண்டும்,
தீர்மானம் 8
சூளகிரி பகுதி வரை உள்ள NH HIGHWAY சாலையை மேம்பாலம் பணியினை விரைந்து நடத்திட வேண்டும் என்றும்

தீர்மானம் 9
சூளகிரி பகுதியில் ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டிய மக்களுக்கு பட்டா வழங்கிட கோரியும்

தீர்மானம் 10
அரசு பேருந்துகள் இயக்கக்கூடிய வழித்தடங்களிலும் tollgate கட்டணத்தை தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம்

தீர்மானம் 11
அரசு பேருந்துகள் ordinary சாமல் பள்ளம்,
சின்னார், காமன் தொட்டி ஆகிய இடங்களில் பேருந்து நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட தலைவர் தோழர் பிரதீப் நன்றி உரை கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

செய்தியாளர்
ஜி.பி.மார்க்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version