வீரமணி விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே செல்கிறது.
கடந்த சில நாட்களாக வீரமணியை மிரட்டி பணம் வாங்கியதாக சிலரின் பெயர்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான பெயர் ரஞ்சன் குமார். இவர் காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர். இந்த நபரும் சிறையில் இருக்கும் சாந்தியும் வீடியோவை காண்பித்து வீரமணியை மிரட்ட ஜான்பாண்டியனை அணுகியதாக செய்திகள் பரவியது.
இந்த சம்பவம் பற்றி பத்திரிகையாளர் வாராகி செப்டம்பர் முதல் வாரத்திலேயே சொல்லிவிட்டார். எனவே இந்த செய்தி உண்மை தான். அதே போல இன்று பேட்டியளித்த ஜான் பாண்டியனும், ரஞ்சன் மற்றும் சாந்தி இருவரும் தன்னை சந்தித்தனர் என்பதை மறுக்க வில்லை. மிரட்டல் மற்றும் பணம் விஷயத்தில் ஜான் பாண்டியன் வேறொரு வெர்ஷன் சொல்கிறார். அதை தள்ளி வைப்போம்.
தற்போது இந்த ரஞ்சன் குமார் இன்னொரு டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார். 2024-ம் ஆண்டே வீரமணியின் வீடியோ ரஞ்சனுக்கு கிடைத்து விட்டது. அப்போதே சாந்தி இவருக்கு அறிமுகம். சாந்தியின் வீட்டுக்கு சென்ற பொழுது அந்த வீட்டில் இருந்த பெரிய டிவியில் இந்த வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார் சாந்தி. அதை தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார் ரஞ்சன்.
அதற்கு பிறகு இதுதொடர்பாக காவல்துறையிடம் புகாரும் அளித்ததாக சொல்கிறார் ரஞ்சன். அதற்கு ஆதாரமாக மகேஷ்குமார் என்ற காவல் அதிகாரிக்கு வாட்சப் மூலம் வீடியோ அனுப்பியதை காட்டுகிறார்.
எழுத்து வடிவமாக புகார் அளித்தும், வீடியோ ஆதாரம் கொடுத்ததும், இன்னார் தான் குற்றவாளி என்று சொல்லியும், ஆதாரம் எங்கே இருக்கிறது என்ற தகவலை சொன்னபிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது நடந்தது 2024.
இந்த ரஞ்சன் தற்போது நல்லவர் போல தான் முன்பே புகார் கொடுத்ததாக சொல்கிறார். ஆனால் இரண்டு வருடமாக இந்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார். தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் கூட வெளியே சொல்லவில்லை. வீரமணி கைது செய்யப்பட்டு 20 நாட்களாகியும் கூட வெளியே சொல்லவில்லை. வீரமணியை மிரட்டி பணம் வாங்கியவர்கள் லிஸ்டில் ரஞ்சன் பெயரும் வந்ததால், இப்போது வெளியே வந்திருக்கிறார்.
இன்னொரு புறம் 2024-ம் ஆண்டே புகார் வந்த பிறகும், அதுவும் வீரமணி என்ற நபர் தான் இப்படி செய்திருக்கிறார் என்று தெரிந்த பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது.
இந்த விவகாரத்தில் நேற்று வரை டிபெண்ட செய்து கொண்டிருந்த திமுகவினர் ஒரு பாயிண்டை முக்கியமாக சொல்லி வந்தனர். புகார் கிடைத்த ஒரே நாளில் நாங்கள் வழக்கு பதிவு செய்து விட்டோம் என்று தங்களுக்கு ஏற்பட்ட டேமேஜை குறைக்கப் பார்த்தனர். ஆனால் புகார் கொடுத்து ஒரு வருடமாக எந்த நடவடிக்கையும் இல்லை என்பது இப்போது தான் புரிகிறது.
மேலும் 2025 அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கும் வீரமணியை தண்டிப்பதற்காக பதியப்பட்டது அல்ல. வழக்கை காரணம் காட்டி வீரமணியை மிரட்டி பணம் பறிப்பதற்காகத்தான் மேம்போக்காக ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் பறித்த பிறகு பிப்ரவரி மாதம் இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது வீரமணி தான் என்று தெரிந்தும், அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தின் ஆரம்பப்புள்ளி சாந்தி. அவர் வீரமணி நிறுவனத்தில் பணிபுரிபவர். அதே சமயம் வீரமணியால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. வீரமணியின் இந்த படுபாதக செயலுக்கு உறுதுணையாக இருந்தவரும் சாந்தி தான்.
வீரமணியிடம் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் சாந்தியின் கண்ணை உறுத்தியிருக்கிறது. அதனால் வீரமணியின் இந்த கொடூரத்தை படம் பிடித்திருக்கிறார். அதை வைத்து பணம் பெறுவதற்காக தான் ரஞ்சனை தொடர்பு கொண்டிருக்கிறார். ரஞ்சன் மூலமாக ஜான்பாண்டியன் இதற்குள் வருகிறார். ஆனால் அவரிடம் வீடியோ காட்டப்பட்டதா என்பது பற்றி தெளிவில்லை.
சாந்தியை பாதிக்கப்பட்டவராக காட்டி, வீரமணியிடம் இருந்து பணம் பெற பஞ்சாயத்து செய்ய பேசப்பட்டது என்பது ஜான்பாண்டியன் வெர்ஷன்.
ஆனால் ரஞ்சன் மற்றும் சாந்தியிடம் வீடியோ இருப்பது தெரிந்து இருவரையும் மிரட்ட ஜான்பாண்டியன் வந்தார் என்பது ரஞ்சனுடைய வெர்ஷன்.
சாந்தி மற்றும் ரஞ்சன் ஆகியோர் ஜான் பாண்டியன் மூலமாக வீரமணியை மிரட்டினார்கள் என்பது வாராகி வெர்ஷன். இதில் எது உண்மை என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
இந்த பஞ்சாயத்தில் வீரமணியிடம் பணம் பெற்று பங்கு பிரித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவரை தான் இவர்களது ஆட்டம்.
இதற்கு அடுத்தது தான் அதிகாரிகள் ஆட்டம். அருண், பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம், பிரகாஷ் ஆகியோர் உள்ளே வருகிறார்கள். சாந்தி, ரஞ்சன், ஜான்பாண்டியன் பஞ்சாயத்து கண்டிப்பாக அருணுக்கு தெரிந்திருக்கும். வீரமணி பணம் காய்ச்சி மரம் என்பதால் அவரை மிரட்ட ஒரு டம்மி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
2024-ல் ரஞ்சன் கொடுத்த வீடியோ ஆதாரத்தில் வீரமணியின் முகம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் 2025-ல் கொடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தில் வேண்டுமென்றே விடீயோவின் தரம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வழக்கின் நோக்கம் விசாரணை அல்ல. பணம் பறிப்பது. அதுவும் ரஞ்சன் அனுப்பிய வீடியோ முழுவதுமாகவே இருக்கிறது. ஆனால் 2025 புகாருக்கு பெறப்பட்ட வீடியோ சில நொடிகள் மட்டுமே அடங்கிய காட்சிகள் என்று சொல்லப்படுகிறது.
இதிலேயே இந்த வழக்கின் நோக்கம் தெரிந்து விட்டது. 2025 அக்டோபரில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடத்துவதாக சொல்லி, வீரமணியிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.70 கோடி வரை பறித்திருக்கிறார்கள். அதன் பிறகு வழக்கை முடித்து விடலாம் என்று நீதிமன்றம் செல்ல, அங்கே நீதிபதி பத்மா டிவிஸ்ட் வைத்து விட்டார்.
இதில் இன்னொரு முக்கிய கேள்வி. 2024-ல் ரஞ்சன் கொடுத்த புகார் என்னவானது. ஏன் அதில் நடவடிக்கை எடுக்கவில்லை. யாருடைய செல்வாக்கு காரணமாக வழக்கு பதிவு செய்யப்படாமல் போனது என்பது இன்னொரு முக்கிய கேள்வி.
2024-யே வீடியோ ஆதாரம் கிடைத்தும், வீரமணியை மிரட்ட 2025 அக்டோபர் வரை அருண் மற்றும் பிரகாஷு, சுரேஷ் வேதநாயகம் கூட்டணி காத்திருந்தது என்பது இன்னொரு முக்கிய கேள்வி.
2024-ல் ரஞ்சன் கொடுத்த புகாரின் போது திமுகவில் உள்ள பவர்புல் ஆட்களால் வீரமணி காப்பாற்றப்பட்டிருக்கலாம். அதனால் ரஞ்சன் மற்றும் காவல்துறையும் அமைதியாக இருந்திருக்கலாம்..
ஆனால் 2025-ல் சாந்தி மற்றும் ரஞ்சன் பஞ்சாயத்து மூலம் பணம் வாங்கியது தெரிந்ததால், அதன் பிறகு அருண், பிரகாஷ், சுரேஷ் கூட்டணியும் களத்தில் இறங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.
2024-ல் அருண் அவ்வளவு பவர்புல் இல்லை. ஆனால் 2025-ல் அருண் திமுக ஆட்சியில் சக்திவாய்ந்த அதிகார மையமாகி விட்டார் என்பதை இங்கே பொருத்திப் பார்த்தால், எல்லா கணக்கும் சரியாக வரும். 2025-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு பற்றி திமுக மேலிடத்துக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் கூட இருந்திருக்கலாம். அந்தளவு சக்தி வாய்ந்த நபராக அருண் இருந்தார்.
இந்த பிரச்சினையில் தவெக அரசு யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் அடுத்தவரை கைகாட்டி வருகின்றனர். மேலே குறிப்பிட்ட யாருமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவில்லை. எனவே வீரமணியின் குற்ற வழக்கை தனியாகவும், வீரமணியை மிரட்டி பணம் பறித்தவர்கள் வழக்கை தனியாகவும் நடத்தினால் மட்டுமே இதில் ஒரு முடிவு கிடைக்கும் .
முதல்வர் விஜய் அவர்கள் இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது.
பொருத்திருந்து பார்க்கலாம்.

