திருச்சி கலையரங்கம் மத்திய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி நிருவாக அமைச்சர் K.N. நேரு அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைக்கோ அவர்களும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் அவர்களும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் ,அரசு அலுவலர்கள், கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட அளவிலான சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதிய நியாயவிலை கடைகளுக்கு கலைஞர் காலம் தொட்டு பெரும் பார்மை கட்டிடங்கள் சொந்த கட்டிடங்களாக உள்ளன. வாடகைக்கு செயல்படும் கடைகளுக்கு அரசுக்கு சொந்தமான இடங்களில் விரைவாக கட்டிடங்கள் கட்டப்படும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கூட்டுறவு துறையில் மக்களுக்கும், தொழிளாலர் களுக்கும், மீனவர்களுக்கும், ஏழை, எளியோர்க்கும் கூட்டுறவு துறையில்தான் மிக எளிய ஆவணங்கள் மூலம் மக்கள் பெரும் பயன் பெறும் வகையில் செயல் படுபடுகிறது என அமைச்சர் K.N.நேரு அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். விவசாயி களுக்கு உரம் தரம்வாய்ந்தாகவும் , மிகக் குறைந்த விலையிலும் வழங்கப் படுவதாவும் தெரிவித்தார். அதேபோல் மக்கள் நற்பணியில் முழுத் தொண்டாற்றுவது கூட்டுறவு துறைதான் என பெருமையுடன் தெரிவித்தார்.