தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் மகளிர் சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஓசூரில் உள்ள பேண்டலூனில் 23.03.2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. வழக்கறிஞரும்
சமூக செயல்பாட்டாளர்
ம.ரேணுகா கருத்துரையாளராக பங்கேற்றார், மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின வரலாறு, வீரமங்கைகள் என்ற தலைப்பில் 3 நிமிட பேச்சு போட்டி நடைபெற்றது. தொழில் முனைவர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்.லி.கத்திஜா தலைமையில் நிகழ்வை நடைபெற்றது. ஓசூர் கிளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஜே.ஜூலியட் கிறிஸ்டினா வரவேற்புரை ஆற்றினார்

அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் கவிஞர் எம்.வள்ளிநாயகி நிகழ்வு உதவி செய்தார். Respiratory technology oxford university, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒசூர் கிளை R.S. இந்துலக்ஷ்மி நன்றியுரை ஆற்றினார். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி செய்தியாளர் மு.நந்தகுமார்