Wednesday, December 31, 2025
No menu items!

திருச்சி பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பில் தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியின் தலைவர் சத்தியம் சரவணன் M.A.B.L. கூறியதாவது:”. தங்கள் கட்சியின் கோரிக்களை, பட்டியலிட்டு உரையாடினார். 1. ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் 2. வனத்துறையில் ஆடு மேய்க்க பழைய பட்டி பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் . 3. தமிழகம் முழுவதும் பிராய்லர் கோழிக்கு விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அதேபோல ஆட்டுக்கறிக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ‘ 4. கால்நடை வளர்ப்போர் இடம்விட்டு இடம் பெயர்ந்து ஆடு, மாடு மேய்ச்சலுக்காக காடுகளில் தனியாக மேய்ச்சல் பகுதிகளில் இருப்பதால், ஆடு, மாடு மேய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ” தமிழக சட்டமன்றத்தில் அவர்களை அதாவது கால்நடை வளர்ப்போரை பாதுகாக்க சட்டம் இயற்றிட வேண்டும் என்றும். 5. ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகப்படியான மக்கள் ஆடு மற்றும் மாடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருவதால் அங்கே ஆடு மாடு வளர்க்கும் தொழில் அபிவிருத்திக்காக பல தொழில்நுட்பங்களை அடக்கிய பிரம்மாண்டமான கால்நடை பூங்கா அமைத்து கால்நடை வளர்ப்பு போரின் பொது அறிவு பெருக உதவிடும் . . என்ற நோக்கத்தோடு அரசு கால்நடைப் பூங்கா அமைத்திட கோரிக்கையாக வைக்கிறோம் என்றும் ” தமிழகம் எங்கும் கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பு ஊசிகள் தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ; 7. தமிழகம் முழுவதும் பனைமர கல் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் 8. தற்போது செயல் இழந்து இருக்கும் பனைமர வாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்றும் ‘ 9. பதநீரை மற்ற குளிர் பானங்களைப் போல பதப்படுத்தி எல்லா குளிர்பானங்களும் கடைகளில் எப்போதும் விற்பனை செய்யப்படுவது போல பதநீரையும் விற்பனை செய்ய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்றும் ’10. தென் மாவட்டத்தில் அதிகமான பனை மரங்களும் அதிகமான பனை மர தொழிலாளர்களும் இருப்பதால் பனை மரத்தில் கிடைக்கும் பணங்கிலங்கில் இருந்து பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் 11. தமிழக ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘ 12. மக்களுக்கு உடல்ரீதியான கெடுதல்களை ஏற்படுத்தும் பால் பாக்கெட்டுகளை அறவே ஒழித்து பால் பாக்கெட் தயாரிக்கும் நிறுவனங்களை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்றும் , 13. ரேஷன் கடைகளில் காலை மாலை இருவேளையும் அரசு நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் பசு மாட்டு பாலை பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 14. இன்றைய உணவு பழக்கத்தால் கடுமையான நோய்கலெல்லாம் பெருகி உள்ள மிகக் கடுமையான காலகட்டத்தில் மனிதர்களுக்கு கேன்சர் போன்ற புதிய நோய்களை ஏற்படுத்தும் பிராய்லர் வெள்ளை கோழி பண்ணைகளை அதிரடியாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் ..

15. பிராய்லர் கோழி அளவிற்கே உற்பத்தியை பெருக்குவதற்கு இளம் தொழில் பயில்வோருக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு முறை பற்றி அறிவித்தும் பயிற்சி அளித்தும் பிராய்லர் கோழிக்கு இணையாக நாட்டுக்கோழிகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு பயிற்சி அளித்து வங்கி கடன்களை வழங்கி நாட்டுக்கோழி வளர்ப்பு முறையை தெளிவான முறையில் யிற்சியின் மூலம் மக்களுக்கு அளித்து.. இளம் தொழில் முனைவோர் நாட்டு கோழி வளர்க்க அரசு வங்கி கடன் உதவி செய்து உணவு முறையில் மக்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ’16. ‘ நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் எளிதாக கடன் வழங்க வேண்டும் என்றும் ”17. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணத்து வகைகளை உடனடியாக வழங்கி அவர்கள் கண்ணீர் துடைக்க வேண்டும் என்றும் , 18. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி இளைஞர் சமுதாயத்தையும் தமிழ் சமூகத்தையும் காக்க வலுவான சட்டத்தை இயற்றி தமிழகத்தை காக்க வேண்டும் என்றும் வேண்டும் 19. காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு சப் -. இன்ஸ்பெக்டர் S.S.I. பணிப் பதவி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் :’20. தமிழக விவசாயிகளுக்கு உரம் கலப்படம் இல்லாமலும் பட்டுப்பாடு இல்லாமலும் விவசாயிகளுக்கு கிடைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 21. தமிழகத்தில் விவசாய கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியின் தலைவரும் அவர் கட்சியைச் சார்ந்த தொண்டர்களும் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களது கட்சியின் கோரிக்கைகளாக முன்வைத்து உரையாற்றினர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version