திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு இன்று திருச்சி கலையரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயலர் திரு.K.வீரராகவ ராவ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வாக திருச்சி மாவட்டத்தி கல்லூரி படிப்பு பயிலும், பயின்று முடித்த மாணவர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் ஆகியோருக்கு குழு விவாதத்தின் வழியாக மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள அலுவலர்களால் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.
அவற்றில் 2000-ஆம் ஆண்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உதவி இயக்குநராக இருந்த திரு.சுரேஷ்குமார் அவர்களால் தன்னார்வ பயிலும் வட்டம் நிறுவப்பட்டு இன்று வரை வேலைவாய்ப்புத் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இத்திட்டம். அவ்வாறு துவங்கப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் பிரதானமாக போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் என பலநூறு மாணவர்களுக்கு வருடந்தோறும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் I.A.S, (இந்திய ஆட்சிப் பணி), I.P.S. (இந்திய காவல் பணி), I.R.S. (இந்திய வருவாய் பணி), Group 1 & 1 ( தொகுதி -1, 11). வங்கிப்பணி, இரயில்வே துறைப்பணி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு இங்கு பயின்று தேர்வாகிச் சென்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம், புது டில்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள் என்பது திருச்சி தன்னார்வ பயிலும் வட்டத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் மட்டுமல்லாது தகவல் தொடர்பு திறன்களை வளர்த்தல், தொழில் முனைவோருக்கான சிறப்பு வழிகாட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவர்களுக்கான பிரத்யேக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், புகை வண்டியில் வினாடி வினா நிகழ்ச்சிகள், Vison 2020. தலைமைப் பண்பு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதற்குமான அறிவு மற்றும் ஆளுமை வளர்க்கும் பயணத்திட்டம் என மாணவர்களின் பல்வேறு அறிவு தாகங்களுக்கும் நீருற்றாக விளங்கியது இத்தன்னார்வ பயிலும் வட்டம் என்றால் அது மிகையாகாது.
மேலும், இங்கு படித்த மாணவர்களுக்கு வழங்கிய ஊக்கம், வழிகாட்டுதல், தனிப்பட்ட கவனம், மாணவர்களின் தேவையறிந்து அவர்களுக்கு உதவுதல் என பல்வேறு மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்த பாதையமைத்துக் கொடுத்து இளைய சமுதாயத்தின் சிறந்த வழிகாட்டிகளில் ஒருவர் என்ற சிறப்பு பெற்றவர் உதவி இயக்குநர் திரு.சுரேஷ்குமார் ஆவார்.
இவ்விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வாக, வெற்றிகரமாக செயல்பட்டுவரும் வட்டத்தினை துவங்கி சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பணியாற்றிய தன்னார்வ பயிலும் திரு.சுரேஷ்குமார் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக வேலைவாய்ப்புத்துறை அலுவலர்களுக்கும். மேலும் இத்தன்னார்வ பயிலும் வட்ட வழிகாட்டுதல் பணிகளில் தங்களை இணைத்துக்கொண்ட மற்ற துறை உயர் அலுவலர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் திருச்சி தன்னார்வ பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கம் இவ்விழாவில் கௌரவித்து மரியாதை செய்தது.
திருச்சி மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவிற்கு திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தினைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் பற்றிய வழிகாட்டுதல் பெற்றனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயலர் திரு.K.வீரராகவ ராவ். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர். காவல்துறை ஆணையர். மாநகராட்சி ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர்கள் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தினைச் சேர்ந்த I.A.S, (இந்திய ஆட்சிப் பணி), IP.S. (இந்திய காவல் பணி), I.R.S. (இந்திய வருவாய் பணி), Group – | & 1 (தொகுதி-11). வங்கிப்பணி, இரயில்வே துறைப்பணி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு இங்கு பயின்று தேர்வாகிச் சென்று இந்தியா முழுவதும் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட உயர் அலுவலர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
