வரும் சட்டமன்றத் தேர்தலில்
பழனிச்சாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது.
திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் டிடிவி தினகரன் திருவெறும்பூர் காட்டூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும் பின்வருமாறு:-
கேள்வி :-
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உங்களை நம்பி வந்தவர்களை அரசியல் அனாதை ஆக்கிவிட்டீர்கள். என்ற வீடியோ வெளியிட்டுள்ளாரே ?
பதில் :-சந்தனம் கடத்தல்
வீரப்பன் ஸ்டைலில் கேசட் வெளியிடுகிறார்.
அவர் சொல்லியிருக்க மாட்டார்.
அது தவறாக இருக்கலாம்.
18 எம்எல்ஏக்கள்
பழனிச்சாமி ஆட்சி தொடர்வதற்காக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் வகையில் சென்றனர்.
அவர்களை பதவி நீக்கம் செய்தது பழனிச்சாமி தான்.
இது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எனவே, ஆர்பி உதயகுமார் தவறாக சொல்ல மாட்டார்.
முதலில் அது உதயகுமார் கொடுத்தா என்பதை பார்க்க வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில்
பழனிச்சாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது.
பழனிச்சாமி என்ற துரோகியை வீழ்த்தி வருங்காலத்தில் துரோகம் என்ற வார்த்தையை
அரசியலில் நினைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருக்கு இந்த தேர்தலில் பதிலடி கொடுப்போம்.
கேள்வி :-
வரும்
சட்டமன்றத் தேர்தலில் 5 முனைபோட்டி நிலவுமா ?
பதில் :-
எனக்குத் தெரிந்து
4 முனை போட்டியாக மட்டுமே நிலவும்.
இன்றைய அதிமுக
ஜெயலலிதா அதிமுக இல்லை.
எடப்பாடி அதிமுக கட்சியாகத் தான் உள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற அடிப்படையை தகர்த்து விட்டு
தன்னைத் தவிர யாரும் போட்டியிடக் கூடாது என்று செய்திருக்கிறார்
எனவே அதிமுகவை எடப்பாடி அதிமுக வாக
மாற்றி விட்டார்.

கேள்வி :-விஜயை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்கும் பணி நடைபெறுகிறதா?
பதில் :-கரூரில் நடந்தது குற்ற சம்பவமில்லை. அது ஒரு விபத்து.
விஜய் தார்மீக பொறுப்பு ஏற்று இருந்தால் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்காது.
கேள்வி :-திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவாக பேசுகிறார், செய்கிறார். செந்தில் பாலாஜிக்கு
கீளின் ஸ்ட் கொடுத்ததாக கூறுகிறார்கள்.
திமுகவிற்கு சாதகமாக நான் ஒரு போதும் பேசவில்லை.
பதில் :-
தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுபவமிக்க தலைவராகவும்,
50 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்று இருக்கிறார்.
கூட்டணி கட்சியினர் மற்றும் திருமாவளவன் போன்றவர்கள்
கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக விஜயை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார்.
விஜயை கைது செய்தால்
அது தவறான முன்னுரணமாக மாறிவிடும்
என்பதால் விஜயை கைது செய்யவில்லை.
கரூர் சம்பவத்தில் அனைவரும் துக்கத்தை அனுசரிக்கும் இந்த நேரத்தில்,
தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணிக்கு
இழுக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி நரித்தனமாக செயல்
படுகிறார்.
தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு எடப்பாடி பொறுப்பேற்றுக் கொண்டாரா?
பின்னர் எவ்வாறு கரூர் சம்பவத்தில் முதல்வரும்,
தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும் என
எடப்பாடி எப்படி சொல்ல முடியும்?.
கேள்வி :-
விஜய் பிரச்சாரம் குறித்து நீங்கள் அவருக்கு கொடுக்கும் அறிவுரை என்ன?
பதில் :- யாருக்கும் அறிவுரை வழங்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பு பின் திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி ஆலோசனை கூட்டம் காட்டூர் முத்துமணி மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள் ராஜசேகரன், ரெங்கசாமி,முன்னாள் , மாவட்ட செயலாளர் கே வி டி கலைச்செல்வன், மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் பொய்கைக்குடி சுபாஷ்,மாவட்ட அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் நவல்பட்டு என் ஆர் துளசிதாசன் , ஒன்றிய இளைஞரணி செயலாளர் நவல்பட்டு என் ஆர் டி லிங்கேஸ்வரன், மலைக்கோயில் சக்திவேல், பகவதிபுரம் முத்துக்குமார், வக்கீல் ராஜ்குமார், நவல்பட்டு ராஜேந்திரன்,நிர்வாகிகள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,தருண்,நாகூர் மீரான்,தன்சிங்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.