புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் லட்சுமி (33) வீட்டில் துணிகளை அயன் செய்து கொண்டிருந்ததார். இந்நிலையில் திடீரென மின்சாரம் தாக்கியதில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.