புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான்விடுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜாஸ்மின் பானு. இவரிடம் தேவதாஸ் என்பவர் பட்டா மாறுதலுக்கு சென்றபோது கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு அவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தேவதாஸ் 4000 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு மீதத் தொகையை தீபாவளி முடிந்து தருவதாக தெரிவித்த நிலையில் அந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வைத்து வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு அந்த பணத்தை டிராவில் வைத்துள்ளார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு தேவதாசிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதும் அதற்கு தேவதாஸ் 4000 ரூபாய் கொடுத்து மீதத் தொகையை தீபாவளி முடிந்தவுடன் தருவதாக கூறியதும் பின்னர் 4000 ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு டிராவில் வைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்.பழனிவேல்