பிரபல நடிகர் ஆன சூர்யா ஜூலை 23ஆம் தேதி அன்று அவரது 49 வது பிறந்த நாளை கொண்டாடினார். சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது சகோதரர் மற்றும் நடிகருமான கார்த்தி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் ஆர்யா மற்றும் திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
திரை பிரபலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அவரது கோடான கோடி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதில் பல மாவட்டங்களில் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் ரத்த தானம் செய்யப்பட்டது. திருவாரூரில் சூர்யா நற்பணி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.
சூர்யா இறுதியாக விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்களில் காட்சியளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தற்போது அவர் நடித்து வரும் காங்குவா திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கையில் அவருடைய இந்த பிறந்த நாளில் ரசிகர்கள் திரைப்படத்திற்கு எதிர்பார்க்கும் அதே எதிர்பார்ப்போடு அவரது பிறந்தநாளன்று ரத்த தானம் அளிப்பது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நன் மதிப்பை பெற்றுள்ளது.
அ.காவியன்
செய்தியாளர்