Saturday, August 30, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதொடர் புகார் எதிரொலி.. இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி மாற்றம்…

தொடர் புகார் எதிரொலி.. இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி மாற்றம்…

விராலிமலை பொதுமக்கள் தொடர் புகார் காரணமாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கரூருக்கு அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் அக்பர் அலி. பணியில் சேர்ந்த நாள் முதலே பொது மக்களிடம் மிகவும் கடினமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்கள் அழைக்கழித்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனையடைந்து வந்தனர். இதனால் இவர் பணியில் சேர்ந்த நாள் முதலே பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து அதிக அளவில் குற்றம் சாட்டுக்கள் அடங்கிய புகார்கள் தமிழக அரசுக்கு சென்றவண்ணம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த அக்பர் அலியை நிர்வாக நலன் கருதி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்து அதிரடி உத்தரவிட்டது. இந்த பணிமாறுதலையடுத்து பொதுநல அமைப்புகள் அரசியல் கட்சியினர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments