Friday, March 13, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருவோணம் கதிர் அறுக்கும் இயந்திர தொழிலாளி பலி

திருவோணம் கதிர் அறுக்கும் இயந்திர தொழிலாளி பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே இருசக்கர வானத்தில் சென்ற கதிர் அறுக்கும் இயந்திர தொழிலாளி சாலையோர தடுப்பு சுவரில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் திருவோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் நாயக்கர் பட்டி பகுதியைச் சேர்ந்த ராமராஜன் இவரது மகன் அஜித்குமார் வயது 25 இவர் கடந்த இரண்டு மாதங்களாக திருவோணம், ஊரணிபுரம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் கதிர் அறுக்கும் இயந்திர தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார் தினந்தோறும் காலையில் டீ குடிக்க ஊரணிபுரம் கடை தெருவுக்கு காலை நேரத்தில் வந்து செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது இந்நிலையில் இதே போல் இன்று காலை அஜித்குமார், இருசக்கர வாகனத்தில் ஊரணிபுரத்திற்கு வந்து டீ குடித்துவிட்டு ஊரணி புரத்தில் இருந்து கலியரான்விடுதி நோக்கி இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கலியரான்விடுதி வளைவு எச்சரிக்கை குறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி சுவற்றில் மோதி அஜித் குமார் கீழே விழுந்துள்ளார் அப்போது அவர் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்து விட்டார் இதை அறிந்த அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், உள்ளிட்ட போலீசார் விபத்தில் இறந்த அஜித்குமார் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சம்பந்தமாக திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் திருவோணம் பகுதியில் கதிர் அறுக்கும் இயந்திர ஊழியர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments