தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மகாராஜா புரம் பகுதியில் இயங்கி வரக்கூடிய தனியார் செங்கல் சூலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் 10 பேர் சக தொழிலாளரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கு பெற நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி காதுகுத்து நிகழ்ச்சிக்கு சென்று மாலை 10 பேரும் ஒரே வாகனத்தில் திரும்பி வரும்போது முசிறி அருகே யமுனாபுரம் எதிர்பாராத விதமாக கார் மரத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த எட்டு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் சாத்தனூர் பகுதியை சேர்ந்த
சங்கர், மகாராஜா சமுத்திரம் பகுதியில் சேர்ந்த சுப்பிரமணி, ராஜேஷ் , முருகன், மாணிக்கம், சக்திவேல் ஆகிய ஆறு பேரும் உயிரிழந்த நிலையில் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆறு பேரும் எந்த வித பின்புலமும் இல்லாத செங்கல் சூலையில் பணியாற்றக்கூடிய தினக்கூலி தொழிலாளர்கள் அவ்வப்போது விவசாய கூலி தொழிலுக்கு சென்றும் செங்கல் சூலையிலும் பணியாற்றி வந்த இவர்கள் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயதான இவர்கள் உயிரிழந்தது இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் சிறு சிறு பிள்ளைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவர்களுக்கு அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இவர்களது வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்தால்தான் இவர்களது வாழ்க்கை மேம்படும் என தெரிவிக்கின்றனர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள்.

