Thursday, August 21, 2025
No menu items!
HomeUncategorizedதிருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்த. முன்னாள் மாணவர்கள்,...

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்த. முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் உண்ணாவிரதம்..

திருச்சி திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடில்
1949ஆம் ஆண்டு பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார் துவக்கப்பட்டது.
இங்கு ஆதரவற்ற ஆண் குழந்தைகள் கல்விப் பயிலும் வகையில் உண்டு, உறைவிட பள்ளியாக நடைபெற்று வருகிறது. இக்குடிலை சாய்பாபா பஜனை மடமாகவும், ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி மையமாகவும் மாற்ற முயலும் சங்பரிவார் அமைப்புகளின் முயற்சிகளை கண்டித்தும், குடிலை
பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார் வழியில், குடிலில் படித்து, பயிற்சி பெற்று பிரம்மச்சரியம் ஏற்ற பிரம்மச்சாரிகளால் தான் தொடர்ந்து நடத்த வேண்டும் .
குடிலினை தோற்றுவித்த இராமசாமி அடிகளார் வகுத்த சட்ட விதிகள் படி குடில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்கள் தந்து பார்ம்-7 ஐ பதிவு செய்த இராமமூர்த்தி, மகாராஜன், சிதம்பரம் மற்றும் அவரது சகாக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடில் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நபர்களை வைத்து பார்ம்-7 ஐ பதிவு செய்து தந்த மாவட்ட பதிவாளர் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து மறுபரிசீலனை செய்து தற்போது வழங்கிய பார்ம்-7 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக பொய்யான தகவல்களை பரப்பி சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை,எளிய குழந்தைகளின் வாழ்வாதாரமான குடிலின் வங்கிக் கணக்குகளை முடக்கிய இராமமூர்த்திக்கு தக்க சட்டத்தில் தண்டனை வழங்க வேண்டும்.
குடிலின் ஆவணங்களை சட்டத்திற்கு புறம்பாக குடிலில் இருந்து எடுத்துச் சென்ற இராமமூர்த்தியை தண்டிக்க வேண்டும்.
குடிலானது ஒரு அமைதியான மற்றும் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கல்வி நிறுவனம் ஆகும். அதை ஆர்எஸ்எஸ்-ன் பயிற்சி பள்ளியாக மாற்ற முயற்சி செய்யும் குறிப்பிட்ட நபர்களை குடிலில் இருந்து உடனடியாக சட்டப்படி வெளியேற்ற வேண்டும்.
இராமமூர்த்தி குடிலில் இருந்து எடுத்துச் சென்ற குடிலுக்கு சொந்தமான ஆவணங்களை தற்போதைய தலைவர் பிரம்மச்சாரி வீரச்சந்திரன்டம் திரும்ப பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட வேண்டும்.
குடிலுக்கு உள்ளே முன்னாள் மாணவர்கள் வராமல் தடுக்கும் குடிலிற்கு சிறிதும் சம்பந்தமில்லாத அன்னியர்களை இக்குடிலில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து குடில் மீட்புக்குழு சார்பில் ஞாயிறன்று
திருப்பராய்த்துறை கடைவீதியில்
உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு
இராமகிருஷ்ணா குடில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பாலமுருகன், செயலாளர் மேகநாதன், பொருளாளர் கிளின்டன் ஆகியோர் தலைமை தாங்கினார்.போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.போராட்டத்தை விளக்கி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், குடில் வழக்கறிஞர் மூத்த தோழர் முத்துகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிட கழக
பிரச்சார செயலாளர் சீனிவிடுதலை அரசு,
திக தலைமைக்கழக பேச்சாளர் வக்கீல் புலிகேசி, பிரம்மச்சாரி வீரசந்திரன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் மகேந்திரன் தந்தை பெரியார் திராவிட கழக வின்செனட் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிவப்பிரகாசம் தென்னிந்திய விவசாயிகள் சங்க அய்யாகண்ணு, திருப்பராய்த்துறை பஞ்சாயத்து தலைவர் பிரகாசம்மூர்த்தி, திமுக வர்த்தக அணி கௌதமன், பெருகமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா அருண், சிறுகமணி ஊராட்சி கவுன்சிலர் ஞானப்பிரகாசம், குடில் முன்னாள் தலைமை ஆசிரியர் சின்னையன் ஆகியோர் பேசினர்.
உண்ணாவிரத போராட்டத்தை
திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் எலுமிச்சை சாறு கொடுத்து முடித்து வைத்தார்.
இதில் குடில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version