மனிதநேய சேவையில் முன்னணியில் செயல்பட்டு வரும் ரோட்டரி மாவட்டம் 3000 சமூக நலன் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், சென்ற வருடம் ஆளுநர் ரோட்டரி இன் ராஜா கோவிந்தசாமி அவர்களின் தலைமையில் வருங்கால ஆளுநர் ரோட்டரி இன் ஆர் பி எஸ் மணி அவர்களின் வழிகாட்டுதலுடன், ரோட்டரி இன்டர்நேஷனல் மானியம் மற்றும் ரோட்டரி இன் ஏ கே எஸ் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி நிதி மூலம் ரத்ததான வாகனத்தை ரத்த மையத்திற்கு அதிகாரப்பூர்வமாக இன்று வழங்கப்பட்டது . மேற்கண்ட ரத்ததான வாகனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ரத்ததான முகாம்களை எளிதாக நடத்த முடியும் என்றும் அவசர காலங்களில் தேவையான ரத்தத்தை விரைவாக சேகரித்து உயிர்களை காக்கும் முக்கியமான சேவையாக இது மாறி செயல்படும் என்றும் ” ரோட்டரி மாவட்டம் 3000 சமூக சேவையில் தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தியும் இந்த நடமாடும் ரத்ததான வாகனம் மனித உயிர்களின் மதிப்பை உணர்த்தும் ஒரு முக்கிய முயற்சியாகவும் சுகாதாரத் துறைக்கும் பெரும் துணையாகவும் அமையும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது .. மேலும் ரோட்டரி மாவட்டம் 3000 வருங்கால ஆளுநர்கள் ரோட்டரி லியோ பெலிக்ஸ் மற்றும் ரோட்டரி இன் மீனா சுப்பையா ஏ ஆர் எஸ் சி டாக்டர் தமீர் பாஷா டி ஆர் எஃப் சி ரோட்டரி இன் கண்ணன் ஆகியோர்களும் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசிய உயிர்த்துளி ரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபாகரன் அவர்கள் இந்த சேவைக்கு உறுதுணையாக இருந்த ரோட்டரியின் ஏ கே எஸ் டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கும் முன்னாள் ஆளுநர் ரோட்டரி இன் ராஜா கோவிந்தசாமி அவர்களுக்கும் வருங்கால ஆளுநர் ரோட்டரி ஆர்பிஎஸ் மணி அவர்களுக்கும் மற்றும் நோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பிற்கும் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றனர் . மேற்கண்ட நடமாடும் ரத்த வங்கிக்கு முதன்மை தொகுப்பாளராக ரோட்டரி எண் சுபா பிரபு அவர்களும் இரண்டாம் தொடர்பாளராக ரோட்டரியின் முகமது தாஜ் அவர்களும் இணைந்து இந்த Global grant என்ற உலக நிதி நிறுவனத்தில் இந்தத் திட்டத்திற்கு தேவையான தொகையை பெற்றுத் தந்தனர் .
