திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2காந்தி மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மீன் மார்க்கெட் வளாகத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள், தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தினந்தோறும் இரு முறை கிருமி நாசினி கொண்டுகழுவ வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் உதவி ஆணையர் திரு.சாலை தவ வளவன்,உதவி செயற்பொறியாளர் திரு இப்ராஹிம்மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அய்வாளர்கள் உடன் இருந்தனர்