நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கோட்டான மதசார்பின்மைக்கு எதிராகவும்.” இந்துத்துவ சனாதன தொடர்பான வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ் பார்வையுடன், தீர்ப்புகளை வழங்கி வருவதாகவும், மேலும் நீதிபதி சுவாமி நாதன் அரசியலமைப்பு சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாண உறுதி மொழியை வெளிப்படையாக மீறி வருவதாகவும், இதனால் சட்டத்தின் மீது அசையா நம்பிக்கை வைத்துள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள். மற்றும் பல, அமைப்புகள் வெளிப்படையான கவலை யை தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.. மதுரை மாவட்டம் , திருப்பரங்குன்றம் , தொடர்பாக முன்பே இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு உள்ள நிலையில், அதே பிரச்சினையை ஒரு நீதிபதி அமர்வு விசாரிப்பது சட்ட ரீதியாக ஏற்கத்தக்தா என கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறினர்…. திண்டுகல் மாவட்டம், சின்னாளப் பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில்பட்டி என்ற ஊரில் பட்டயக் கல்லாக இருந்த கருவேல முட்செடிகள் இருள்மண்டிய அடர்ந்த புதரை “மண்டு கருப்பண்ணசாமி கோயில்” என தவறாக. கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான கருத்தை உண்மையென கருதி அங்கே எக்காலத்திலும் நடைபெறாத கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்திரவிட்டுள்ளார், ஜி.ஆர். சுவாமிநாதன். அதே போல தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் கிறிஸ்துவ மிஷினரி நடத்தும் பள்ளியில் , ஒரு மாணவியின் மரணத்தில் “மத மாற்ற அழுத்தம் காரணமாகத்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசரானை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மனுதாரர் கோரிக்கையில் இல்லாத சிபிஐ விசராணைக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்திரவு இட்டார்..எனவும், மேலும் அதே வழக்கில் அந்த ஊருக்கு மைக்கேல் பட்டி என்ற பெயர் எப்படி வந்தது என விசாரனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார் என்றும் கூறினர். தற்போது மைக்கேல் பட்டி வழக்கில் மத கோணம் எதுவும் இல்லை என சி.பி.ஐ. சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. மேலும் இந்திய நாடாளு மன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன். பதவியை நீக்கம் செய்ய Impeachment motion பாராளுமன்ற உறுப்பினர்கள், 107 பேர் கையெழுத்திட்டு மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சென்னை மற்றும் மதுரை இடையே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வரும் நடைமுறை இருக்கும் நிலையில் நீதிபதி.ஜி.ஆர். சுவாமிநாதன் மட்டும் கடந்த 7 ஆண்டுகளாக அவர் வழக்கறிஞராக பணிபுரிந்த மதுரையிலேயே தொடர்ந்து பணிபுரிந்து கொண்டும், சர்ச்சைக்குரிய மற்றும் சட்டத்திற்கு புறம்பான உத்திரவுகளை பிறப்பிப்பது ஒரு நீதிபதி மீது அவநம்பிக்கையையும் , இயற்கை கோட்பாடுகள் மீது நம்பிக்கை பொதுமக்களுக்கும், தமிழ்நாட்டினர்க்கும் குறையும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தனர். எனவே திரப்பரங்குன்றம் போன்ற மதம் தொடர்பான நிறுவியில் உள்ள மற்றும் எதிர்கால வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இருந்து மாற்றிட வேண்டும் என்றும் , நீதிபதியின்மேல் நிலுவையில் உள்ள Impeachment Proceedings முடிவு கானும் காலம் வரையில் நீதிபதி. ஜி. ஆர். சுவாமிநாதன் வழக்குகள் ஒதுக்கப்படாமல்.”காத்திருப்போர்” பட்டியலில் (Waiting judge-list)ல் வைக்க வேண்டும் என்று பொது மக்களும், வழக்கறிஞர் கமரூதின்., ஆதி நாராயண மூர்த்தி,.த.பெ.தி.க. வின்சென்ட் , முபாரக், கஸ்தூரி இரமணா, சைனி கோபால், சவரிமுத்து, ஜோசப், எம்.பி.செல்வம், ராஜா ,பஷிர் , ஆகியோரும் தொடர்ந்து மக்கள் இயக்கமாக அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பிலும் கையெழுத்திட்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுவாக அனுப்பப்பட்டது.
