திருச்சியில் தலைமை அரசு மருத்துவமனையில் தலைமை சித்த மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சித்த மருத்துவர் Dr.காமராஜ் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அவரது மருத்துவ மனையில் , தங்களது தாய், தந்தையர்களின் நினைவாக இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தினார். இவ் நிகழ்வில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சரிடம் Dr. காமராஜ் சித்தர்களால் அருளப்பட்ட சித்த மருத்துவத்தைப் பற்றியும், சித்த மருத்துவப் பலன்களைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார். அமைச்சர் மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டார். மேற்கண்ட மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பயனாளர் களுக்கு இலவசமாக இரத்த பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, உடல் எடை பரிசோதனை, எலும்பு உறுதித் தன்மை அறியும் பரிசோதனை,ஆகிய பரிசோதனை கலந்து கொண்ட பொது மக்களுக்கு பரிசோதிக்கப்பட்டு, நோய்களை கண்டறிந்து விலையில்லா மருந்துகள் அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. மேற்கண்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடனும், பெருந்திரளாகவும்., கலந்து கொண்டனர் —
