திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.V. சரவணன் அவர்களின் உத்தரவு படியும் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சியாமளா தேவி மற்றும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வின்சென்ட் அவர்களின் பரிந்துரையின்படி திருச்சி அலகு காவல் ஆய்வாளர் திரு. அரங்கநாதன் அவர்களால் கடந்த 04.09.25-ம் தேதி 5500 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட
மணப்பாறை தாலுகா தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ரத்தினம் என்பவர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்