இந்திய தேர்தல் ஆணையமா ?அல்லது பா.ஜ.க. கட்சியின் ஆணையமா? என வாக்குரிமை காப்பு இயக்கத்தின் சார்பாக வழக்கறிஞர் மார்ட்டின், மக்கள் அதிகாரம் மையத்திலிருந்து காளியப்பன். தந்தை பெரியார் திராவிட கழக திருச்சி மாவட்ட தலைவர் J.வின்சென்ட், சைனி, சாமனிய மக்கள் கட்சியின் சார்பாக ஜோஸப், கலந்து கொண்டனர். வழக்கறிஞர் மார்ட்டினின் உரையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் , கடந்த கால தேர்தல் முறைகேடுகளை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் பொறுப்பிலிருந்த அரசின் முக்கிய மூன்று பொறுப்புகளில் இருந்த நபர்களை ஒன்றிய அரசு தன்னிச்சையாக நீக்கிவிட்டு தேர்தல் ஆணைய முறைகேடுகளுக்கு ஆதரவாக செயல் படும் நபர்களுக்கு பொறுப்பு வழங்கி மிகப் பெரிய தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக வருகிற 6.9.2025 அன்றிலிருந்து தேர்தல் ஆணையத்தையும், முறைகேடுகளை உருவாக்கி ஒன்றிய ஆட்சியை கைப்பற்றிய ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் எதிர் முழக்க போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். மேலும் மக்கள் அதிகாரம் காளியப்பன் கூறிய பீகார் தேர்தலில் முறைகேடுகளை எப்படி செய்தார்கள் என ஆதாரத்துடன் கூறினார். மேலும் அவர் பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர் பெரும் பாலும் பா.ஜ.க எதிரான வாக்குகளை செலுத்தும் நபர்களை ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்தின் மூலமாக பெயர் நீக்கம் செய்து நீக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தார். ஒரே வாக்காளரின் பெயர் ஐந்து, ஆறு, இடங்களுக்கு மேல் உள்ளது எனவும், படிவம் 6.ஐ பயன்படுத்தி பல முறைகேடுகளை செய்து பீகார் தேர்தலிலும், கர்நாடகா தேர்தலிலும் வெற்றி பெற தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசுக்கு செயல்பட்டுபா.ஜக வெற்றி பெற்றுள்ளதால், மேற்கண்ட பா.ஜ.க. அரசை கலைத்து நியாமான தேர்தல் நடத்த வேண்டும் எனவும் , கேட்டுக் கொண்டார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கணவரே பல நியாயமான கேள்விகளை வைத்து உள்ளார். தற்போது வரை எந்த பதிலும் ஒன்றிய அரசிடமிருந்து வர வில்லையென கூறினார். குடிமக்களின் வாக்கு உரிமையை பாதுகாக்க வேண்டுமென்றும், இந்திய திருநாட்டின், வாக்கு உரிமையை திருடக்கூடாது என்றும் . வாக்கு மோசடிக்கு துணை போகக்கூடாது என்றும். இந்திய தேர்தல் ஆணையரை பதவி விலக வேண்டியும்., போலி வாக்குகளால் வெற்றி பெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்மென்றும், முறைகேடுகளுக்கு ஏதுவான E.V.M மிஷினை தடை. செய்ய வேண்டுமெனவும், உண்மையான தேர்தல் சனநாயகத்தை நிலைநாட்ட வாக்கு சீட்டை அமுல்படுத்த கோரியும் கோரிக்கை வைக்கப் பட்டது. ஒரு ஓட்டு ஒரு மதிப்பு. என்பதை உணர்த்து. மக்களிடம் முறை கேடுகளை எடுத்துரைக்க தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.