திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும், நலவாரிய அலுவலகங்களில் ஏஜென்டுகளின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், வெளிமாநில தொழிலாளர்கள் வருகைக்கு வரம்பு கட்டிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் சங்கம்

திருச்சி மாவட்ட குழு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் ,மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் நடராஜா, மாவட்ட பொருளாளர் ராமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மருதாம்பாள் நன்றி கூறினார்.
