தமிழ்நாடு எஸ்டஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர் நலச்சங்க கோரிக்கையாக மணிப்பூர், இராஜஸ்த்தான், மற்றும் ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுபபாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளதைப்போல் ….. தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 153 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தில் பத்தாண்டு களுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம். செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை செயல் படுத்தி அறிவிக்க வேண்டுமென கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இம்மாநாட்டு கூட்டத்திற்கு காங்கிரஸ் சார்பில் மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், வி.சி.க. கட்சியின் சார்பில் தமிழாதன் .இந்திய கம்னியூஸ்டு கட்சியின் சார்பில் எம். செல்வராஜ் மற்றும் எய்ட்ஸ் . மாநில நிர்வாகிகள் கருப்புசாமி ரவி இருதயராஜ் ஜெகஜோதி சுசிலா வில்சன் மணிவாசகன் முத்துராமலிங்கம் கண்ணன் மீனா முருகதாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிறைவுறையாக பாலசுப்பிரமணியன் நன்றி உரையாக பி. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர் . நிறைவேற்றுமா? தமிழக அரசு|