கடந்த 01-09-24 ஆம் தேதி தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகில் டொயோட்டா கார் கம்பெனி வாசலில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்மணியிடம் பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அந்தப் பெண்மணியை வழிமறித்து அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இதில் கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்த தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்கில் தொடர்புடைய திருச்சி மனச்சநல்லூரைச் சேர்ந்த இரண்டு நபர்களை பிடிக்க முற்பட்ட போது காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பாலத்தின் கட்டையில் மோதி கீழே விழுந்ததில் ஒருவருக்கு இடது காலில் எழும்பு முறிவும் மற்றவர்களுக்கு வலது கையில் எலும்பு முறியும் ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.