நேற்று தஞ்சை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்த மாலையில் கவுன்சிலர்கள் கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த கவுன்சிலர்களை பார்த்து மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் நான்தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேனே நீங்கள் ஏன் இது போன்ற பிரச்சனைகளை செய்தீர்கள் என்று கோபமாக கேட்க கொந்தளித்துப் போன கவுன்சிலர்கள் நாங்கள் வைத்த கோரிக்கையை நீங்கள் இதுவரை செய்யவில்லை மேயரிடமும் பேசவில்லை, மேலும் மேயரும் உங்களை மதிக்க மறுக்கிறார்.

அப்போது நாங்கள் மட்டும் என்ன உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்று சொல்லி எதிர்ப்பாக பேச அவர்களை சமாதானப்படுத்த முயன்ற மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகர் வேறு வழியின்றி சில கவுன்சிலர்களை ஜாதி பெயர் சொல்லி செல்லமாக அழைத்தும் நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டோம் நாங்கள் கட்சி தலைமைக்கு தகவலை கொண்டு செல்கிறோம் என்று சொல்லி பல கவுன்சிலர்கள் கூட்டத்தை பாதியிலே முடித்துவிட்டு வெளியேறியதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
செய்தி –செந்தில்நாதன்.