அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த இளமதி என்பவர். புத்தாண்டை முன்னிட்டு நகரில் உள்ள கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்று வந்தபோது அவர் அணிந்திருந்த நகை தொலைந்துபோனது கண்டு பதட்டமடைந்தவர் .தனது உறவினர்களோடு கடைவீதி மற்றும் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தார்.
இதனிடையே முருகன் பேங்கர்ஸ் நகைகடையில் பணிபுரியும் சந்திரசேகர் டீ சாப்பிட வந்த போது பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசமரத்தடி ஓரமாய் ஏதோ வித்தியாசமான பொருள் கிடப்பதை கண்டு அருகில் சென்று பார்த்தபோது. கீழே தங்கத்துடன் தாலி கயிறு் இருப்பதை கண்டு எடுத்து தனது உரிமையாளர் கருப்புசாமியிடம் கொடுத்து.காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார்.

நகையை தொலைத்த இளமதி தனது உறவினர்களோடு காவல்நிலையம் சென்று நகை தொலைந்து போன தகவலை கூற ஏற்கனவே கருப்புசாமி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நகையையும், இளமதி தொலைத்த நகையையும் காவல் ஆய்வாளர் ( பொ) வேலுச்சாமி, உதவி காவல் ஆய்வாளர் சரத்குமார் உள்ளிட்ட காவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு நகையை தொலைத்த இளமதியிடம் ஒப்படைத்தனர். சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் மதிப்புடைய நகையினை எடுத்து சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க உதவிய நேர்மையாளர்கள் சந்திரசேகர் மற்றும் கருப்புசாமி ஆகியோர்களை செந்துறை காவல்துறையினரும் , பொதுமக்களும் பாராட்டினார்கள்.

எம்.எஸ்.மதுக்குமார்.

