அரியலூர் மாவட்டம் செந்துறை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் அண்ணாநகரில் செந்துறையிலிருந்து மாத்தூர், திட்டக்குடி செல்லும் பிரிவு சாலையும் , செந்துறை ஜெங்கொண்டம் பிரதான சாலையும் அமைந்துள்ளது. போதுமான எச்சரிக்கை பலகைகளோ, வேகத்தடைகளோ அங்கு இல்லாத நிலையில் அடிக்கடி சாலைவிபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,
இன்று நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழேந்தி என்பவர். அதே நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் பகுதி நேர பணியாளராக வேலை பார்க்க மாத்தூர் சாலையிலிருந்து ஜெயங்கொண்டம் சாலை நோக்கி திரும்பிய போது. செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் சந்தோஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த புகழேந்திக்கு தலை மற்றும் இடது கை மணிகட்டில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்த புகழேந்தி மகன் கணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி விபத்து நடக்கும் அண்ணாநகர் பிரிவு சாலைகளில் விபத்து நடக்காமல் இருக்க போதிய பாதுகாப்பினை இதுவரை செய்யாமல் சம்பந்தப்பட்ட துறையினர் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது.
எம்.எஸ்.மதுக்குமார்