கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா மார்ச் 14 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இந்தத் தேர் திருவிழா நிகழ்வின் போது ஓசூர் மாநகரில் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை தன்னார்வலர்கள் வழங்கினர் அந்த வகையில் ஓசூர் பாகலூர் சாலையில் நல்லூர் செக்போஸ்ட் அருகில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்த நிகழ்வை AMPERE நவீன், பேக்கரி குருநாதன், கௌதம், ஸ்கிராப் மஞ்சு, பவுல்ட்ரி சோலைராஜ், குருசாமி,ஹேமந்த், கிருபானந்தம், சந்துரு,சரவணன், சுதாகர் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்