தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறை படுத்துவதை கண்டித்து விவசாயிகள் , தொழிலாளர்கள் கட்சி
கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் பொன். குமார் தலைமையில் இன்று நடந்தத திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் பொறியாளர் ஜெகதீசன் தலைமையில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் பொன்.குமார் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு தொகுப்பு சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது அதில் உள்ள தொழிலாளர்கள் விரோத சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன் தொடக்கமாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சட்டத்தினால் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்கள் கலையக்கூடிய ஆபத்து உள்ளது. இச்சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் , நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
விரும்பிய நேரத்தில் தொழிலாளர்களை முதலாளிகள் பணி நீக்கம் செய்ய முடியும்.
இச்சட்டம் மூலம் எல்லா நிறுவனங்களிலும் பெண்கள் இரவில் பணியாற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக்கப்படும்.
100 தொழிலாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொழிற்சங்கம் தொடங்க முடியும் என இச்சட்டம் கூறுகிறது. இதனால் தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிலாளர்கள் உரிமை மறுப்பதாகும்.
தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெறக் கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.
