தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும்
21.11.2025 அன்று மோடி அரசு அறிவித்த லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி. ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க திருச்சி – கரூர் மண்டலம் சார்பில் செவ்வாய் அன்று அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க திருச்சி,கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திருச்சி, கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்,துணைத் தலைவர் முத்துக்கருப்பன் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

