தஞ்சை மாவட்டத்தில் கலால் துறை சோதனை பிரிவில் தாசில்தாராக இருக்கும் அந்த நபர் . அவர் பணி மாறுதலில் பட்டுக்கோட்டை செல்கிறார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வரவேண்டிய இந்த மாதம் கப்பம் 2000 ரூபாயும் அடுத்த மாதத்திற்கான கப்பம் ஆயிரம் ரூபாய் சேர்த்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடையிலும் வசூலித்து உள்ளாராம். இதனால் டாஸ்மாக் கடையில் பணி பரியும் ஊழியர்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர். இங்கு இருக்கும்போது பணம் வாங்கினார் சரி இங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் போதும் அடுத்த மாதம் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொண்டு செல்கிறார் இது எந்த வகையில் நியாயம் இந்தப் பணம் அவருக்கு ஒட்டவே ஒட்டாது என கொந்தளிக்கின்றனர் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள். மேலும் ஏற்கனவே இவர் சொத்து சேர்த்து வைத்ததை கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றனர் என்பது கூடுதல் தகவல்.
என்ன கொடுமை சார் இது.?
மேலிருக்கும் கிரிநாதற்கு புரிந்தால் சரி.!
செய்தி. வெற்றி