Monday, January 19, 2026
No menu items!
HomeUncategorizedஅரியலூர் மாவட்டத்தில் கடந்த 2025 ஆண்டு மட்டும் வாகன விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 211.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2025 ஆண்டு மட்டும் வாகன விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 211.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி நேற்று 07.01.26 அன்று வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில். அரியலூர் மாவட்டத்தில் 2025 கடந்தாண்டு நிகழ்த்தப்பட்ட 9 கொலை வழக்குகளில் 8 பெண்கள் உட்பட 24 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 வழிப் பறி வழக்குகளில் 3 பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப் பட்டு, ரூ.4.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கீழப்பழுவூர் அருகே கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.3.56 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக் கப்பட்டன.
119 திருட்டு வழக்குகளில் 132 பேரும், பாலியல் வன் கொடுமை, முயற்சி தொடர்பான 13 வழக்குகளில் 7 பெண்கள் உட்பட 25 பேரும், 200 போக்சோ வழக்குகளில் 43 பெண்கள் உட்பட 294 பேரும் கைது செய்யப்பட்டதோடு சிறார் திருமணம் தொடர்பாக 102 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறார் திருமணத்துக்கு எதிராக 2,114 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் பெண் உட்பட 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான 410 வழக்குகளில் 115 பெண்கள் உட்பட 419 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது. கஞ்சா விற்பனை தொடர் பான 39 வழக்குகளில் பெண் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள் விற்றதாக 235 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கனிமவள திருட்டு தொடர்பாக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 250 பேர் கைது செய்யப்பட்டு, 231 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. வாகன விபத்து உயிரிழப்பு தொடர்பாக 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 என கூறியுள்ளார் இதில் பெரும்பாலும் போதை மற்றும் அஜாக்கிரதையாய் இயக்கியதால் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version