Saturday, August 15, 2026
No menu items!
HomeUncategorizedஅரசியல் டைம்ஸ் வார இதழ் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

அரசியல் டைம்ஸ் வார இதழ் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஆம்பியர் கிரீன் பிளானட் மின்சார இரு சக்கர வாகன ஷோரூம் வாயிலில் அரசியல் டைம்ஸ் மற்றும் நமது பத்திரிக்கையாளர்கள் சார்பாக 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, இந்திய தேசியக் கொடியை மூத்த அரசியல்வாதியும் தமிழக வெற்றி கழகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளருமாகிய வா.புகழேந்தி அவர்கள் ஏற்றி வைத்து தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

இந்நிகழ்வில் அரசியல் டைம்ஸ் வார இதழின் ஆலோசகர்கள் உமாசங்கர், சோலைராஜ், கிருபானந்தம், சிஎஸ்கே ஜெராக்ஸ் சந்துரு, குருசாமி, மஞ்சு வேலு,ஐயா கோவிந்தராஜன், தில்லை நகர் ராஜேஷ்,அமுதம் பார்த்திபன், லோகேஷ், கேசிசி நகர் கார்த்திக், ஆம்பியர் கிரீன் பிளானட் பங்குதாரர் நவீன், அரசியல் டைம்ஸ் புகைப்பட கலைஞர்கள் மோஹித்,சஞ்சய் மற்றும் பழனி, பாலாஜி தமிழக வெற்றிக்கழக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் செல்வி, இளைஞர் அணியைச் சேர்ந்த ஜெயன், விஜயன் மற்றும் நண்பர்கள், அரசியல் டைம்ஸின் நலம் விரும்பிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது, அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி அவர்கள் அரசியல் டைம்ஸ் வார இதழின் இணை ஆசிரியர் ஜி.பி.மார்க்ஸ் அவர்களிடம் பிரத்தியேக பேட்டி அளித்தார் வரும் வாரம் வரும் இதழில் அந்த பேட்டியை காணலாம்.

அரசியல் டைம்ஸ்
ஓசூர் மாநகரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version