இன்று தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனை பின்பற்றி தமிழகத்தில் அனைத்து அலுவலகங்களும் பள்ளி, கல்லூரிகள் உட்பட்ட அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.ஆனால் தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை கல்லூரி இன்று கல்லூரியை திறந்து வைத்து அரசு உத்தரவை மீறி வகுப்பு நடத்தி வருகின்றனர்.

இது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது அங்கு படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதத்திற்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அரசின் உத்தரவையாவது பின்பற்றி இருக்கலாம் என்கின்றனர் தஞ்சை பகுதி மக்கள்.
செய்தி : நாதன்.