Monday, January 19, 2026
No menu items!
HomeUncategorizedவயோதியரை குறிவைத்து செயின் பறித்த குற்றவாளியை விரைந்து பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.

வயோதியரை குறிவைத்து செயின் பறித்த குற்றவாளியை விரைந்து பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் எல்லைக்குட்பட்ட நத்தகுழி கிராமம் விசாலாட்சி என்பவரிடம் இரண்டரை பவுன் தங்கச் செயினையும் மற்றும் வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலம் என்பவரிடம் மூன்றரை பவுனில் பாதியையும் கடந்த வாரம் பறித்துக்கொண்டு தப்பி சென்ற மர்மநபரால் வயதான பெண்களிடம் ஒருவித அச்சம் நிலவியது இதுகுறித்து அரசியல் டைம்ஸில் செய்தியும் வெளியிட்டிருந்தோம் இச்சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.

பல கோணங்களில் குற்றவாளியை கண்டறிய முயன்ற போலீசாருக்கு சிறிய துப்பு ஒன்று கிடைக்க இவ்விரு சம்பவத்திலும் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்பது தெரிவந்தது. இதையடுத்து 13.01.26 ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாருக்கும் , மாவட்ட காவல்துறைக்கும் இப்போது தான் நிம்மதியாக உள்ளது. போலீசாருக்கு பாராட்டுக்களும் ,நன்றியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version