திருச்சி வடக்கு மாவட்டம் முசிறியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்பு.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்ப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன உரையாற்றினர்கள்.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருச்சி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி ஒன்றியம், பேரூராட்சி வார்டு கிளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொடர்கள் திரளாக திரளாக கலந்து கொண்டனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்