திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதல்வர் 110வது விதியின் கீழ், சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல் கோட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.290 கோடியில் இந்த நூலகம் உலக தரத்தில் மிகப்பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைகிறது.18,33 சதுர மீட்டரில் தளப்ப்பரப்பு அமைகிறது.
இந்த நூலுகம் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 8 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது.ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைகிறது. மேலும் நகரும் படிக்கட்டு, காப்ஸ்யூல் மின் தூக்கி, பயணிகள் மின் தூக்கி, சேவை மின்தூக்கி ஆகிய இதர வசதிகளும் அமைகிறது. இந்த நிலையில், கட்டட வடிவமைப்பு தயார் செய்யவும், ஆலோசகர்களை தேர்வு செய்யவும் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, வரைபடம் பொது பணித்துறையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளுக்கான டெண்டர் கோரப்படும்.
பிரமாண்ட நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் தனித்தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவும், அறிவியல் மையம், விளையாட்டு மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவு, ஏஐஐ (ஆர்டிபிசியல் இண்டலிஜன்ட்ஸ் பிரிவு), அறிவுசார் மையம், உள்ளிட்ட பிரிவுகள் அமைய உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெருமையை அறிவிக்கும் விதமாக ஒரு ஆர்ட் கேலரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதைபோல், ஆயிரம் பேர் அமரக்கூடிய ஒரு பிரமாண்ட கூட்ட அரங்கமும் அமைய உள்ளது. நூலகத்தின் கட்டுமான பணிகள் ஜனவரி 2026ல் முடிந்து பயன்பாட்டிற்கு வரலாம்’’ என்றனர்.
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவையில் பெரியார் நூலகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அடிக்கல் நாட்டி இருந்தார்.
இதனிடையே காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் 27-ந் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து, திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
இந்நிலையில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி,பணிகளைத் தொடங்கி வைத்தார்.தலைமைச் செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு,மற்றும் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்).இ.செந்தில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார், வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி,அரசு அலுவலர்கள், வாசகர் வட்ட தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.