நடிகர் ரஜினிகாந்த் உடல் நல குறைவால் செப்டம்பர் 30, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவரான ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் வேட்டையின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது உடல் நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அந்த வீக்கத்தை அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ முறையில் மருத்துவர் சாய் சதீஷ் அவர்கள் transcatheter முறையில் சரி செய்துள்ளார்.
இதயத்தில் இருந்து ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட வீக்கம் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை சரியாக இருக்கிறது இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
அ. காவியன்
செய்தியாளர்