மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த நாள் விழா பிப்ரவரி 24 அன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களின் தலைமையில்
தங்க ரதத்தில் அம்மாவின் திருவுருவ படத்துடன் ஊர்வலமாக சென்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி நலத்திட்டங்களை வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அம்மாவின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியினை ஓசூர் மாநகர கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் திரு ராஜு, கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு. சிட்டி ஜெகதீசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் திரு. JP.ஜெயபிரகாஷ், ஓசூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் திரு. நாராயணன், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் திரு.ராமு, ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் திருM.அசோகா (கிழக்கு), திரு.வாசுதேவன் (தெற்கு), ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருH.ஸ்ரீதர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திரு. J.M.சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் திரு. சரவணகுமார், ஓசூர் மாநகர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு. ராஜா வாசு, முன்னாள், இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை, வட்ட அவைத் தலைவர்கள், மேலமைப்பு பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், கழக முன்னோடிகள் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்