திருச்சி மாவட்டம் முசிறியில் அந்தரப்பட்டி பகுதியில் வசித்து வந்த கீதா என்ற பெண்ணை முசிறி அருகே வாளவந்தி கிராமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து ஜம்புநாதபுரம் சென்று கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த வாளவந்தியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.உடனே அங்கிருந்தவர்கள் ரமேஷை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இருவரையும் வெட்டிவிட்டு ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாலுடன் கொலையாளி பாலச்சந்திரன் சரண் அடைந்தார்.இரண்டு பேரை வெட்டியதற்கான காரணம் குறித்து சரணடைந்த பாலச்சந்திரன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செய்தியாளர் ; ரூபன்ராஜ்