பெரியார் குறித்து ஆதாரமற்ற அவதூறு பேச்சுக்களை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பேசி வருவதால் அதிருப்தியில் இருந்த அக்கட்சியை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மற்றும் பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று 21/01/2025 தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவராஜ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற

இணைப்பு விழாவில் அமைச்சர் சக்கரபாணி புதிதாக இணைந்த தொண்டர்களுக்கு திமுக துண்டு அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தே.மதியழகன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
M. நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்