HomeUncategorizedமாணவர்களுக்கான கலை திருவிழா

மாணவர்களுக்கான கலை திருவிழா

2026-27 ஆம் ஆண்டிற்கான, 1-12 வகுப்புகளுக்கான ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில், தேவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேவூர் அரசுப் பள்ளி மாணவி சக்தி ஷ்ரீ அவர்கள் குத்து விளக்கு ஏற்றி போட்டியினை தொடங்கி வைத்தார். மாணவ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிருந்தா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இளையோர் திறன் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் , நாட்டுப் புற நடனம்,பிற வகை நடனம், வில்லுப்பாட்டு, மணல் சிற்பம், களிமண் சிற்பம், மெழுகு சிற்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பகுதி நேர பயிற்றுநர்கள், நாட்டுப்புற கலைஞர்கள்,இசையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகள் நடைபெற்றவுடன், முடிவுகள் அறிவிக்கப்பட்டு,எமிஸில் அன்றைய தினமே பதிவேற்றம் செய்யப்பட்டது.தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் போட்டிகள் நடைபெற்றது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் திரு.ஜெயபாலன் தேவூர் நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருமதி விஜயா, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், திருமதி.பத்மப்ரியா, திரு.பாரதிதாசன்,நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் திருமதி. ஜெயந்தி, சாந்தி,கீதா,சந்திரா,முத்தமிழ்ச் செல்வி, பத்மாவதி, கவிதா ஆகியோர் விழாக் குழுவினராக செயல்பட்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ரமேஷ் மற்றும் திரு.சச்சிதானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு.சுப்ரமணியன் மற்றும் அன்பழகன் போட்டிகளைப் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கினர்.கீழ்வேளூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. த.அமுதா தலைமையில் வட்டார வள மையம் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டது.

ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments