இன்று மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம் பியுமான திரு.தொல். திருமாவளவன் அவர்கள் ஆஜராகி உள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த 2003-ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அருகில் உள்ள நீடூரில் இன்று விசிக கட்சியில் திருமாவளவன் அவர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கட்சியில் இணைகின்றனர்.
செய்தியாளர்- பிரவீன் குமார்