மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் , மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புறவாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகிய அமைப்புகள் இணைந்து மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றன.
இந்த முகாமில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 78 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை செய்தியாளர்- பிரவீன் குமார்